சிக்கிமிற்கு சுற்றுலா சென்றபோது ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 8 பேரை தேடும் பணி தீவிரம்..!

சிக்கிமின் மங்கன் மாவட்டம் சவுங்தங் - லட்சென் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணயளவில் கார் சென்றுகொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 1,000 அடி பள்ளத்தில் திஸ்டா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒடிசாவை சேர்ந்த சாய்ராஜ் ஜினா , ஸ்வயம் சுப்ரமித் நாயக் ( வயது 17) என இருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால், கார் டிரைவர் உயிரிழந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விபத்தில் கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காரில் பயணித்த இட்ஸ்ரீ ஜினா உள்பட 8 பேரின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 பேரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேடுதல், மீட்புப்பணி நடைபெறும் பகுதியில் கனமழை பெய்துவருவதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.