1. Home
  2. தமிழ்நாடு

சாலையோர மரத்தில் மோதிய கார்.. ஒரே குடும்பத்தில் 3 பேர் கவலைக்கிடம்.. அரசு ஊழியர் பலி !

சாலையோர மரத்தில் மோதிய கார்.. ஒரே குடும்பத்தில் 3 பேர் கவலைக்கிடம்.. அரசு ஊழியர் பலி !


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்ப்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவர் கொடைக்கானல் மின்வாரிய அலுவலகத்தில் மின்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் கங்காதரன் கொடைக்கானலில் இருந்து குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான செய்யாறுக்கு காரில் புறப்பட்டு வந்தார். இவர்கள் வந்த கார் வந்தவாசி  - திண்டிவனம் நெடுஞ்சாலையில், வந்தவாசி அருகே உள்ள தனியார் கல்லூரி அடுத்து விபத்திற்குள்ளானது.

அதாவது சாலையில் இருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் சென்று வேகமாக முட்டியது. இந்த விபத்தில் கங்காதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையோர மரத்தில் மோதிய கார்.. ஒரே குடும்பத்தில் 3 பேர் கவலைக்கிடம்.. அரசு ஊழியர் பலி !

காயமடைந்த அவரது குடும்பத்தினர் அலறல் சத்தம்கேட்டு விரைந்த அப்பகுதியினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்த கங்காதரனின் குடும்பத்தினர் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 
newstm.in

Trending News

Latest News

You May Like