கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் விபத்து..!

சென்னை திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கிச் காலை 9 மணியளவில் கார் ஒன்று சென்றுள்ளனது. கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மீது சரமாரியாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த பெண்கள் காயமடைந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் காயமடைந்த பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தால் சுமார் 1 நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.