கேப்டன் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி காலமானார்..!
கேப்டன் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி, சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக (Gynecologist & Pediatric Care Specialist) பல ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான நோயாளிகளுக்கு சேவை செய்து வந்தார்.
இந்நிலையில், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் இன்று விஜயலட்சுமி உயிரிழந்தார். இவரது மறைவு தே.மு.தி.க மற்றும் குடும்பத்தினரிடம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயலட்சுமியின் இறுதிச் சடங்கு நாளை (10.9.2025) மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை, சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தே.மு.தி.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
#NewsUpdate | மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்#SunNews | #DMDK pic.twitter.com/E8hLbfDhtZ
— Sun News (@sunnewstamil) September 9, 2025