1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் புகைப்படம் வெளியானது..!

1

வெற்றிகரமான நடிகர் மட்டுமல்லாது வெற்றிகரமான அரசியல்வாதி எனவும் பெயர் எடுத்த விஜயகாந்துக்கு இந்த இடம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. ஆரம்பகால படங்கள் சரியாக போகாவிட்டாலும் அதன் பிறகு விஜயகாந்த் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியவை. குறிப்பாக கிராமத்து ரசிகர்கள் விஜயகாந்த்தை தங்களது வீட்டில் ஒருவராகவே பார்த்தார்கள். அதனால் ரஜினி, கமலுக்கு இணையாக விஜயகாந்த் வளர்ந்தார்.

நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று சங்கத்தின் கடனை அடைத்து ஒரு ரோல் மாடலாக திகழ்ந்தவர். திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள் ஆக்டிவ்வாக இருந்தபோது அந்தக் கட்சியை தொடங்கி தனக்கிருக்கும் தைரியத்தையும், செல்வாக்கையும் நிரூபித்தார். அதன் பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானதெல்லாம் யாராலும் மறக்கமுடியாதது.

இந்நிலையில் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் இருக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,பல பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வருகின்றனர். அதனால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது.விஜயகாந்த் வென்டிலேட்டரில் இருக்கிறார் என வதந்தி பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த புகைப்படங்களை அவரது மனைவி வெளியிட்டு இருக்கிறார்.வீண் வதந்திகளை பரப்பாதீங்க என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

1

Trending News

Latest News

You May Like