1. Home
  2. தமிழ்நாடு

இன்று டெல்லியில் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது..!

1

நமது நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்படும். இது நாட்டிலேயே மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதன்படி இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது சகோதரர் சுதிஷ் உள்ளிட்டோர் நேற்று மாலை டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. அதனை பெறுவதற்காக நாங்கள் டெல்லி செல்கிறோம். கேப்டனும் வரும் போது விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அந்த நினைவுக்கு எனக்கு வந்துவிட்டது. கேப்டனுக்கு வழங்கப்படும் பத்மபூஷனை பெற்றுக் கொண்டு, நேராக சென்னை வந்து கேப்டனின் கோயிலுக்கு (தேமுதிக தலைமை அலுவலகம்) தான் முதலில் அதை கொண்டு செல்லப் போகிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் அன்றைக்கு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், விஜயகாந்துக்கு இன்று (மே 9) நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like