1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் கேப்டன் மில்லர் பட டிரைலர் - பசியோட சுத்திட்டு இருக்கிற ஒரு சிங்கத்துக்கு இரை கிடைக்குது..!

1

பொங்கல் விருந்தாக வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ .தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’U/A’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில் இந்த படத்தில் 14 இடங்களில் சென்சார் அதிகாரிகள் கத்தரி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சி 3ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், GV பிரகாஷ் குமார் உட்பட கேப்டன் மில்லர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்நிகழ்ச்சியை காண திரண்டு வந்திருந்தனர். இந்தநிலையில் படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியானது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like