1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் நலமாக இருக்கிறார் : வீடியோ வெளியிட்டு பிரேமலதா விஜயகாந்த் தகவல்..!

1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர். வெளியூர்களில் உள்ளவர்கள் சென்னைக்கு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

விஜயகாந்துக்கு இருமல் தீவிரமானதால் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்பி நம் அனைவரையும் சந்திப்பார். மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வழக்கமான ஒன்றுதான். தொண்டர்களும் ரசிகர்களும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அச்சப்படவும் வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like