1. Home
  2. தமிழ்நாடு

வாரத்திற்கு 47.5 மணிநேர வேலை நேரத்திற்கு ஆதரவு - கேப்ஜெமினி தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் யார்டி..!

1

வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி வலியுறுத்தி வருகிறார். இதேபோல், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியனும், ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலைப்பார்க்கலாம் என்றும், ஞாயிற்று கிழமைகளிலும் அலுவலகத்துக்கு சென்று பணியாற்றலாம் என்று தெரிவித்திருந்தார். இவர்களது கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதத்தை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில், கேப்ஜெமினி தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் யார்டியும் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற NASSCOM தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (NTLF) பேசிய யார்டி, வாரத்திற்கு 47.5 மணிநேர வேலை நேரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும், வார இறுதி நாட்களில் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

 

மேலும், ஒரு ஊழியர் வாரத்திற்கு எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரமும் வாரத்தில் ஐந்து நாட்களும் வேலை இருக்கிறது," "கடந்த நான்கு ஆண்டுகளாக எனது வழிகாட்டும் கொள்கை என்னவென்றால், வார இறுதியில் மின்னஞ்சல் அனுப்ப கூடாது என்பதே. அதுவும் அவசரமான விவகாரமாக இருந்தாலும், அதை வார இறுதியில் தீர்க்க முடியாது என்பதை அறிந்திருந்தால், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பக்கூடாது என்பதுதான் எனது கொள்கை என்று குறிப்பிட்டார்.

சில நேரங்களில் வார இறுதி நாட்களில் தான் பணியாற்றுவதாகவும், ஒரு ஊழியருக்கு கஷ்டம் கொடுக்க எந்த அவசியமும் இல்லை, ஏனென்றால் வார இறுதியில் வேலை செய்ய முடியாது என்பது தெளிவாக தெரியும்," என்று கூறினார், எனவே வார இறுதி நாட்களில் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதை எதிர்ப்பதாக கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், ஐடி ஊழியர்களின் விவரங்களை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் இளைய ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாறுவது மிகவும் முக்கியம் என்றும், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் உத்திகளைப் பட்டியலிட்டுள்ளதாகவும் யார்டி கூறினார். கேப்ஜெமினி நிறுவனம், வழக்கமாக காலாண்டு பதவி உயர்வு சுழற்சிகள், தொழில் முன்னேற்றம் குறித்து ஆறு வாரங்களுக்கு ஒரு முறை ஊழியரிடம் கருத்து கேட்பது ஆகியவற்றையும் செயல்படுத்தி வருகிறது என்றும் யார்டி கூறினார்.

Trending News

Latest News

You May Like