"அது பற்றி கருத்து சொல்ல முடியாது" பொட்டில் அடித்தபடி சொல்லிய வனிதா விஜயகுமார் !

பாரதிய ஜனதா கட்சியில் தாம் இணைவது தொடர்பாக முறைப்படி அறிவிக்க உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் பிரபலங்களை தங்கள் கட்சியில் இழுந்து வந்த பாஜக, தற்போது குறி வைத்துள்ளது தமிழகத்தை. இதனால், தமிழக திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் என பலரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். அந்த வரிசையில் அண்மையில் நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனை அவரது தோழிகள் வட்டாரமும் உறுதிபடுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை வனிதா விஜயகுமார், "பாஜகவில் நான் இணைவது தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்பேன். தற்போது அது பற்றி எதுவும் என்னால் கருத்து கூற முடியாது" என பொட்டில் அடித்தபடி சொல்லிவிட்டர். இந்த பதில் இருந்து அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதையும், அவர் பாஜக பக்கம் நெருங்கி வருவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களது கட்சியில் நடிகை வனிதா விஜயகுமார் சேர உள்ள தகவல் அறிந்து பாஜகவினர் உற்சாகமாகி வருகின்றனர்.