1. Home
  2. தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பெண்ணிடம் ரூ.3 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்..!

Q

ஆஸ்திரேலியாவில் இருந்து பெண் ஒருவர் சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அந்த பெண் 3 கிலோ அளவிலான உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 3 கோடி ஆகும். இதனை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த பெண்ணை கைது செய்தனர்.
இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாரிடம் ஒப்படைக்க கொண்டுவரப்பட்டது? என அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கோவை விமான நிலையத்தில் கடந்த மே மாதம் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like