வேட்பாளரை ’ஐட்டம் கேர்ள்’ என்ற முன்னாள் முதல்வர்! நடிகை குஷ்பு கடும் கண்டனம் !

மத்திய பிரதேச மநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவி என்பவரை, ஐட்டம் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பேசியதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் கமல்நாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக வேட்பாளர் இமார்தி தேவியை ஐட்டம் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பெண் ஒருவரை ஐட்டம் என கூறிய கமல்நாத்துக்கு நடிகை குஷ்பு, தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் கமல்நாத் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என்பதால், உண்மையான விஷயங்களிலிருந்து மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது.
பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் அப்படி எதுவும் கூறவில்லை. இப்பினும், நான் கூறிய கருத்து அவமதிப்பதாக யாராவது கருதினால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என கமல்நாத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.