கொரானா பாதிப்புக்கு நாட்டு மருந்து பயன்படுத்தலாமா..? தமிழக சுகாதாரத்துறை சொல்வதென்ன ?

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு நாட்டு மருந்து பயன்படுத்தலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு, தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் எந்தவொரு மருந்துக்கும், தடுப்பூசிக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை வழங்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக நாட்டு மருந்தை பயன்படுத்தலாம் என்றும், இதற்கு பொது சுகாதாரத்துறை அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் போலியானது.
இதில், கொரோனா தொற்றுக்கு கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மருந்துக்கு பொது சுகாதாரத்துறை அங்கீகரித்திருப்பதகாவும் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்து கொரோனா தொற்றை தடுக்கும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே, இதுபோன்று தவறான தகவலை நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற தவறான தகவலை பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படியை தமிழக சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.