1. Home
  2. தமிழ்நாடு

33 மாதங்களில் திமுக செய்த ஒரு நலத்திட்டத்தை கூற முடியுமா? அண்ணாமலை கேள்வி..!

1

திமுக 33 மாதங்களில் செய்த ஒரு நலத்திட்டத்தை கூற முடியுமா? என்று திமுக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கடந்த 10 ஆண்டுகளில், 10.76 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், திமுகவுக்குப் பணம் வரவில்லை என்பதால், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார்கள். வரிப்பணத்தில், நேரடியாக 50% தமிழக அரசுக்குக் கிடைக்கிறது. அது தவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.4,413 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 11 மருத்துவக் கல்லூரியில் ஒன்று திருவள்ளூருக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்தை ரூ.28 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. பிரதமரின் வீடு திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 2,63,000 ரூபாய் மானியம் என 71,532 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1,91,890 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,11,124 வீடுகளில் இலவச எரிவாயு இணைப்பு, 14,621 பேருக்கு 5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு, 72,851 விவசாயிகளுக்கு, வங்கிக் கணக்கில் 30,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடனுதவி, ரூபாய் 6,228 கோடி திருவள்ளூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக 33 மாதங்களில் செய்த ஒரு நலத்திட்டத்தை கூற முடியுமா? மக்கள் வரிப்பணத்தை, இலாகா இல்லாத அமைச்சருக்கு சம்பளமாகக் கொடுத்ததுதான் அவர்கள் செய்துள்ள நலத்திட்டம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் யார் என்பதே தெரியாத கூட்டணி, காங்கிரஸ், திமுக கூட்டணியான இந்தி கூட்டணி. திருவள்ளூரின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூரைப் பின்னோக்கிக் கொண்டு சென்று விட்டார். திருவள்ளூர் பெரும் வளர்ச்சி பெற, திருவள்ளூரின் குரல் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க, அடுத்த இருபது நாட்கள் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். சகோதரர் பொன் பாலகணபதி அவர்களுக்குத் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம். திருவள்ளூரை முன்னேற்றுவோம்.

Trending News

Latest News

You May Like