1. Home
  2. தமிழ்நாடு

மணமான பெண்ணை கல்யாண ஆசைகாட்டி பாலியல் உறவு வைக்கலாமா? குட்டு வைத்த ஹைகோர்ட்..!

1

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ளது சதர்பூர்.. இங்கு வசித்து வரும் வீரேந்திர யாதவ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்தார்.. அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர்.. எனினும், இவர்கள் இருவரும் தனிமையில் எல்லைமீறி பழகி வந்தனர்..

 

திடீரென ஒருநாள் அந்த பெண், வீரேந்திரா மீது போலீஸில் புகார் செய்தார்.. அந்த புகாரில், "தன்னுடைய கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீரேந்திரா அடிக்கடி வீட்டிற்கு வருவார்... அப்போது நாங்கள் இருவரும் உறவு வைத்துக்கொள்வோம்.. வீரேந்திராவுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனாலும் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். கடைசியில் திருமணம் செய்யாமல் என்னை ஏமாற்றிவிட்டார்" என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். போலீசாரும் இந்த புகாரின்பேரில், வீரேந்திரா மீது போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருந்தனர்.. இதையடுத்து, வீரேந்திரா ஹைகோர்ட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார்.. அந்த மனுவானது, நீதிபதி மணிந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வீரேந்திரா தரப்பில் ஆஜரான ஸ்ரேயாஸ் பண்டிட், "பெண் கொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை புகார் செல்லுபடியாகாது. அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் விருப்பப்பட்டுத்தான் மனுதாரருடன் உறவு வைத்துக்கொண்டார். அந்த பெண் கொடுத்துள்ள சம்மதத்தை தவறாகப் புரிந்துக்கொண்டு பெறப்பட்டதாகக் கருத முடியாது. இந்த உறவின் தன்மை குறித்து அந்த பெண் நன்றாகவே அறிவார்'' என்று வாதிட்டார்.அத்துடன், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி திருமணமான பெண் பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக கூற முடியாது என்பதையும், வீரேந்திராவின் வழக்கறிஞர், வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, "புகார் கொடுத்திருக்கும் பெண்ணே மனுதாரரான வீரேந்திராவுடன் 3 மாதங்களாக உறவிலிருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். என் கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞர் என்னுடைய வீட்டிற்கு வருவார் என்றும் கூறியிருக்கிறார்.. புகார்தாரர் வற்புறுத்தப்பட்டதாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை. அதோடு அந்த பெண் பொய்யான வாக்குறுதியின் அடிப்படையில் உறவு வைத்துக்கொண்டதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை" என்று கூறி வீரேந்திரா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இளைஞரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like