வேலியே பயிரை மேயலாமா? ஹாக்கி வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்!
ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஹாக்கி தேர்வு முகாமுக்கு மூன்று பயிற்சியாளர்களுடன் சுமார் 30 சிறுமிகள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முகாமின் இறுதி நாளாகும்.
பயிற்சியாளர் அந்த வீராங்கனையை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமியின் உடல்நிலை ஆரம்பத்தில் நன்றாக இல்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பயிற்சியாளர் பானு அகர்வால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் பேரில், அகர்வாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரித்துவாரில் போலீஸார் கைது செய்தனர். அவரின் பயிற்சி சான்றிதழும் ரத்து செய்யப்படுகிறது.
உத்தரகாண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.