1. Home
  2. தமிழ்நாடு

வெறும் 22 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் நீங்கள் மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கலாமா: அமித் ஷா!

1

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தேர்தல் நேரம் என்பதால் பிரச்சாரம் செய்ய அவருக்கு ஜூன் 1 வரை உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் லோக்சபா தேர்தலையொட்டி 10 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அதாவது கெஜ்ரிவாலின் கேரண்டிகள் என்ற பெயரில் கொடுத்துள்ளார்.

இதை மத்திய அமைச்சர் அமித்ஷா கிண்டல் செய்துள்ளார். ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆம் ஆத்மி கட்சி மொத்தமாக போட்டியிடுவது வெறும் 22 தொகுதிகள்தான். மத்தியில் அரசை ஏற்படுத்த 270 இடங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. அப்படியிருக்கும் ஆம் ஆத்மி, எப்படி மத்தியில் ஆளும் அரசு முடிவெடுக்கும் வகையிலான வாக்குறுதிகளை அளிக்கலாம். வெறும் 22 தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு நாடு முழுவதும் மின் கட்டணத்தை ரத்து செய்வேன் என ஆம் ஆத்மி கூறுகிறது. இதே போன்ற ஒரு ஸ்டன்ட்டைதான் கடந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி அடித்தது. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை. தேர்தலுக்காக இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய கைது நடவடிக்கையே தவறு என கெஜ்ரிவால் வாதிட்டார். ஆனால் அதை கோர்ட் ஏற்கவில்லை. இதற்காகத்தான் அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்தார். அதிலும் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது. “வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை மட்டுமே அவருக்கு ஜாமீன் என்றும், 2ஆம் தேதி அவர் திகார் சிறைக்கு திரும்ப வேண்டும்” என நிபந்தனைகளை விதித்துள்ளது. கடந்த தேர்தலில் டெல்லியில் ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக 50- சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. எனவே இந்த முறை ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி குறித்தெல்லாம் கவலையில்லை.

அடுத்த ஆண்டு பிரதமர் மோடிக்கு 75 வயதானதும் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என கெஜ்ரிவால் சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம். மோடி அரசியலில் நிலைத்திருப்பது கெஜ்ரிவாலுக்கு பிடிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்கிறேன். வரும் 2029ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி பிரதமராக நீடிப்பார். அரசியலமைப்பை மாற்றி அமைக்கவும் ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டையும் பாஜக ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முழு பலத்துடன் பிரதமர் மோடி இரு முறை பிரதமராக இருந்துள்ளார். இரு முறையும் 3 இல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக தலைமையிலான கூட்டணி வென்றது. ராகுல் சொல்வது போல் அரசியலமைப்பை நாங்கள் மாற்ற நினைத்திருந்தால் எங்களை யார் தடுக்க முடியும்? ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை நீக்கவும் ராமர் கோயிலை கட்டவும், ஊடுருவல்காரர்களுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தவும்தான் நாங்கள் எங்கள் மெஜாரிட்டியை பயன்படுத்தினோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Trending News

Latest News

You May Like