கங்குலிக்கு ஒமைக்ரான் பாதிப்பா..?: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..!

கங்குலிக்கு ஒமைக்ரான் பாதிப்பா..?: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..!

கங்குலிக்கு ஒமைக்ரான் பாதிப்பா..?: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..!
X

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ருபாலி பாசு வெளியிட்ட அறிக்கையில், ‘கங்குலியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. காய்ச்சல் இல்லை. ஆக்சிஜன் அளவு 99 சதவீதம் இருக்கிறது.

முந்தைய நாள் இரவில் நன்றாக தூங்கினார். காலை, மதிய வேளையில் உணவு சாப்பிட்டார். மருத்துவக் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணிக்கிறது.

கங்குலிக்கு ஏற்பட்டுள்ள தொற்று ஒமைக்ரான் வைரசா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it