1. Home
  2. தமிழ்நாடு

மகாளயபட்சம் 15 நாட்கள் வாசலில் கோலம் போடலாமா ? போட கூடாதா ?

1

மகாளய பட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பணம், சிராத்தம், திதி கொடுப்பது சிறப்பு. அப்படி கொடுக்க முடியாதவர்கள் தினமும் எள்ளும் தண்ணீரும் மட்டும் இரைத்து முன்னோர்களை வழிபடலாம். சர்வபட்ச அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை அன்று மட்டும் தர்ப்பணம் கொடுத்தால் போதும்.

முன்னோர்கள் நம்முடைய வீட்டிற்கு வரும் காலம் என்பதால் கோலமிடாமல் இருப்பது நல்லது. அப்படி கோலமிட வேண்டும் என்றால் காவி நிறத்தை பயன்படுத்தி மட்டுமே கோலமிடலாம். மாவால் கோலமிடக் கூடாது.

மகாளய பட்ச காலத்தில் மாத விடாய் வந்தால் கணவரை பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட சொல்லலாம். மற்ற சடங்குகளை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதால் மாத விடாய் ஏற்பட்டால் கவலை கொள்ள வேண்டாம்.

தினமும் மதியம் சமைக்கும் உணவை முன்னோர்களுக்கு படைத்து வழிபட்டாலே போதுமானது. தனியாக இலை போட்டு, தினமும் படையல் இட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.

மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களுக்கு தினமும் எள்ளும் தண்ணீரும் இரைத்து, விளக்கேற்றி வழிபட முடியா விட்டால் மகாபரணி அன்று ஒரு நாளாவது கண்டிப்பாக முன்னோர்களுக்கு தனியாக அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.முன்னோர் வழிபாடு தவிர மகாளய பட்ச காலத்தில் அன்னதானம் வழங்குவது மிகவும் சிறந்தது. தினமும் ஒரு உயிரினத்திற்காவது உணவளிப்பது புண்ணியம் தரும்

15 நாட்களும் முழு உபவாசம் இருக்க வேண்டியதில்லை. காலையில் எள்ளும் தண்ணீரும் இரைத்த பிறகு, வீட்டில் விளக்கேற்றி வழக்கமான வழிபாட்டை முடித்த பிறகு உணவு எடுத்துக் கொள்ளலாம். பகலில் முன்னோர்களுக்கு படைத்து விட்டு உணவு எடுத்துக் கொள்ளலாம்.

அசைவ உணவு வகைகள், முட்டை, மதுபானம், வெங்காயம், பூண்டு போன்ற தாமச உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like