1. Home
  2. தமிழ்நாடு

உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா..? ஓபிஎஸ் பதில் இது தான்..!

1

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் கடந்த 1 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியாகவும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியாகவும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்திக்கின்றன. இதில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறியதால் பாஜக, அன்புமணி ராமதாசின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்புவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

இந்த நிலையில், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஓ பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தேர்வு செய்வதற்காக நடந்துள்ளது. இதில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை நான் பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் கிடையாது. கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ராமநாதபுரம் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், “என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது” என்றார். அப்போது இனி உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், மேலே பார்த்து எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது என்று சிரித்தப்படி பதில் அளித்தார்.

தொடர்ந்து அதிமுக குறித்து பேசிய ஓபிஎஸ், “இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் நாட்டு நடப்பினை, அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் அதிமுக இப்படி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். அது நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்கு தெரியும்” என்றார்.

Trending News

Latest News

You May Like