சென்னையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காட்பாடியில் போர்டிங் செய்யலாமா ?
நாம் புக் செய்த ரயிலில் நாம் ஏற வேண்டிய ஸ்டேஷனில் ஏறாமல் வேறு ஸ்டேஷனில் ஏறினால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.என்ன செய்ய வேண்டும் ? வாங்க தெரிஞ்சிக்கலாம்
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களில் போர்டிங் செய்யும் ரயில் நிலையத்தை மாற்ற ரயில்வே நிர்வாகமே வசதியைச் செய்து கொடுத்துள்ளது. அதன்படி நீங்கள் ஒரு ரயிலில் செல்ல முன்பதிவு செய்துவிட்டீர்கள் ஆனால் அதன் பிறகு நீங்கள் ரயிலில் ஏறும் இடத்தை மாற்ற வேண்டும் என்றால் மாற்ற முடியும். அதுவும் ஒரு டிக்கெட்டிற்கு ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். அதுவும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை தான் இந்த டிக்கெட்டை மாற்ற முடியும்.
இதற்கான ஆப்ஷனை ஐஆர்சிடிசி ஆப்-ல இருக்கிறது. நீங்கள் லாக்கின் செய்தவுடன் டிக்கெட் புக் செய்த ஹிஸ்டரிக்குள் உள்ளே சென்று அங்கே மேலே 3 டாட் இருக்கும். அதை கிளிக் செய்தால் போர்டிங் பாயிண்டை மாற்றும் ஆப்ஷன் இருக்கும் அதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
சரி நான் ஆன்லைனில் புக் செய்யவில்லை கவுண்டரில் வாங்கி உள்ளேன். எப்படி மாற்ற வேண்டும் கேக்குறீங்களா ? கவுண்டர் டிக்கெட் கூட நீங்க ஆன்லைனில் மாற்றலாம்.
நீங்கள் ஐஆர்சிடிசி ஆப்-ல லாகின் செய்தவுடன் கீழே "MORE"என்ற ஆப்சன் கிளிக் செய்தால் COUNTER TICKET BOARDING POINT CHANGE இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களை மற்றுமொரு இணையதளத்திற்கு எடுத்து செல்லும். அங்கே Pnr நம்பர் ரயில் நம்பர் கேட்கும். அதன் பின் நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும் அதை கொடுத்து நீங்கள் போர்டிங் ஸ்டேஷன் மாற்றலாம்.
ஆனால் ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு தான் இதைச் செய்ய முடியும் அதற்குப் பிறகு செய்ய முடியாது. இதுதான் தற்போது ரயில்வேயில் பின்பற்றப்படும் விதிமுறை.
ஒரு வேளை நீங்கள் புக் செய்த ரயிலில் போர்டிங் ஸ்டேஷனில் ஏறவில்லை என்றால் என்ன நடக்கும்? பலருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது.
பொதுவாக நீங்கள் ரயிலில் ஏறியதும், நீங்கள் ஏறிவிட்டீர்களா என உறுதி செய்வதற்கு டிக்கெட் பரிசோதகர் ரயில் இருப்பார். அவரிடம் எந்தெந்த பயணிகள் எந்தெந்த சீட்டிற்கு எந்தெந்த ஸ்டேஷனிலிருந்து டிக்கெட் புக் செய்திருக்கிறார்கள் என் பட்டியல் இருக்கும். அதன்படி அவர் குறிப்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிய பின்பு அந்த சீட்டிற்கு வந்து பயணியின் டிக்கெட்டை சோதனை செய்வார்.அந்த பயணி வரவில்லை என்றால் அதைக் காத்திருப்பு பட்டியலில் உள்ள வேறு யாருக்காவது வழங்கிவிடுவார்.
உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்குச் செல்ல டிக்கெட் புக் செய்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒருவேளை சென்னை தாம்பரம் அருகிலோ அல்லது செங்கல்பட்டு அருகிலோ இருந்தால் அந்த ஸ்டேஷனிற்கு ரயில் வரும் வரை டிடி ஆர் காத்திருப்பார். இதற்காக நீங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவேளை நீங்கள் விழுப்புரத்தில் ஏற முடிவு செய்தால் நீங்கள் சென்னை எழும்பூரில் புக் செய்த டிக்கெட் அதற்குள் வேறு பயணிக்கு மாற்றிக்கொடுத்திருக்க நேரிடும். அதனால் நீங்கள் விழுப்புரத்தில் ஏற வேண்டும் என்றால் போர்டிங் ஸ்டேஷனை டிக்கெட்டில் மாற்ற வேண்டும். ஒரு முறை நீங்கள் போர்டிங் செய்ததை உறுதி செய்துவிட்டால் போதுமானது. பயணம் முழுவதும் மீண்டும் மீண்டும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இறங்கும் இடம் என்பது நீங்கள் எந்த இடம் வரை புக் செய்துள்ளீர்களே அதுவரை இறங்கிக் கொள்ளலாம். ஏன் அதற்கு முந்தைய ரயில் நிலையங்களில் கூட நீங்கள் இறங்கிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் புக் செய்த ஸ்டேஷன் தாண்டி செல்ல அனுமதி கிடையாது.