கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா ? - உலக சுகாதார அமைப்பு புதிய ஆய்வு !

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா ? - உலக சுகாதார அமைப்பு புதிய ஆய்வு !

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா ? - உலக சுகாதார அமைப்பு புதிய ஆய்வு !
X

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்ற ஆய்வாளர்களின் புதிய அறிக்கையை ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், கொரோனா பாதித்த நபர் தும்மும் போதும் இருமும் போதும் கண்ணுக்கு தெரியாத அவரது எச்சில் நுண்துகள்கள் மூலமாக, வைரஸ் பரவி மற்றவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடும் என்றும், காற்றோட்டம் குறைவான இடங்களில் எளிதில் பரவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடிய நோய் என அறிவிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா என்பது குறித்து நிபுணர்கள் உதவியுடன் மதிப்பாய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் தெரிவித்துள்ளார்.

ஆய்வாளர்களின் கருத்து உண்மை என நிரூபிக்கப்பட்டால், இதுதொடர்பான எச்சரிக்கையை மக்களுக்கு வழங்குவது மிகக்கடினம் என்றும் தாரிக் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in 

Next Story
Share it