அறிகுறி இல்லாமல் பாதித்தவர்களிடம் இருந்து கொரோனா பரவுமா? - WHO விளக்கம்..

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சமூக இடைவெளி, கைக்கழுவுதல், முகக்கவசம் அணிவது போன்ற நடைமுறைகள் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரி மரிய வான் கெர்கோவ் (Maria Van Kerkhove ) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆய்வுத்தகவல்களின் அடிப்படையில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளிடம் இருந்து, தொற்று பரவுவது உறுதி செய்யப்படவில்லை என்றும், இதுபோன்ற பரவல் மிக அரிதாகவே நிகழ்வதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம், ஐரோப்பிய நாடுகளில் நிலைமை மேம்பட்டு வரும் நிலையில், உலகம் முழுவதும் நிலைமை மோசமடைந்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களில் 9 நாட்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை சாதாரணமானதாக எந்த நாடும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
newstm.in