வங்கி ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை கிடைக்குமா ? நிதியமைச்சரின் பதில்..!
இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் சங்கம் கடந்த மார்ச் 8ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு மற்றும் வாரத்தின் 05 நாட்கள் மட்டுமே வேலை போன்ற முக்கிய கோரிக்கைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசானது வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வை அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பானது வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மேலும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்பதையும் அரசு விரைவில் நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பையும் அவர்கள் மனதில் தூண்டியது. இதற்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்திற்கு ஆதரவு ஏதும் கிடைக்கவில்லை என்று சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பாக எழும் வதந்திகளை ஊழியர்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.