இனி கால்வாய்களை கண்காணிக்க கேமரா..! வெள்ளத் தடுப்புக்கு புது ‘ஐடியா’..?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளிலுள்ள மழை நீர் வடிநீர் கால்வாய் பகுதிகளையும், உபரிநீர் கால்வாய்கள், நீர் வரத்து கால்வாய்கள் ஆகியவற்றினை தூர் வாருதல் போன்ற பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில் மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, முக்கிய பகுதியான கொளப்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் செல்லும் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி வடிகால் கால்வாய் நீரின் அளவு கண்காணிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதை இன்று பொருத்தியுள்ளதாகவும் அதன் விளக்கத்தை தெரிவித்தார்.
பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் நிலையில் அதன் நிலை குறித்து உடனடியாக அறிந்து கொண்டு அதன் மீது கூறிய நடவடிக்கை எடுக்க இது போன்ற செயல் உதவும் எனவும் முக்கிய பகுதிகளில் அதனை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.