1. Home
  2. தமிழ்நாடு

'ஸ்வீட்டி', 'பேபி' என அழைப்பது.. பாலியல் துன்புறுத்தல் கிடையாது..!

1

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

'ஸ்வீட்டி' மற்றும் 'பேபி' என்ற வார்த்தைகள் சமூக வட்டங்களில் பரவலாக இருப்பதால், பெண்களை குறிக்கும் வார்த்தைகள் எப்போதும் பாலின நிறத்தைக் கொண்டிருக்காது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
பெண்களை ஸ்வீட் பேபி என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்றும், அதை வைத்து ஒருவர் மீது புகார் பதிவு செய்வது பொருத்தமாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையில் பயிற்சிக்காக சேர்ந்துள்ள பெண் ஒருவர், தனது உயரதிகாரி தன்னை எப்போதும் ஸ்வீட் பேபி என்று அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என்றும், எத்தனை முறை கூறியும் அதை அவர் நிறுத்துவதில்லை என்பதால் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கூறுகையில், "பேபி அல்லது ஸ்வீட்டி போன்ற வார்த்தைகளால் அழைப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது. இதை பாலியல் துன்புறுத்தல் என நிறுவனங்களின் கமிட்டிகளும் சொல்வது பொருத்தமற்றது. இப்போதைய சமூகத்தில் இதுபோன்ற வார்த்தைகள் எல்லாம் சாதாரணமாக பயன்படுத்தக் கூடியவை. இந்த வார்த்தைகளுக்கு பாலியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. இதுபோல அனைத்திற்கும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தால், அது பெண்களை பாதுகாக்கும் சட்டங்களுக்கே எதிரானதாக மாறிவிடும். அதே சமயத்தில், சம்பந்தப்பட்ட பெண், இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எனக்கு சவுகரியமாக இல்லை என்று வாட்ஸ் அப் போன்றவற்றில் தெரிவித்த பிறகும், அதை எதிர்தரப்பு செய்யக்கூடாது" எனக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தரப்பில் பேசியதாவது, அவர் ஒருபோதும் பாலியல் நிறத்தில் இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை. என்று மூத்த அதிகாரி கூறினார். புகார்தாரர் அசெளகரியத்தை வெளிப்படுத்தியவுடன் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியதாக அவர் கூறினார்.

இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று உள்ளக புகார்கள் குழு (ஐசிசி) ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அவை எப்போதும் பாலியல் நிறத்தில் இருக்க வேண்டியதில்லை என்று கூறியது.

Trending News

Latest News

You May Like