வரும் 8-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..!
தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8-ந்தேதி காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.