1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை இடைத்தேர்தல்..!

1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. 276 ஓட்டுச்சாவடிகளில், 2.34 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். 'இன்டியா' கூட்டணியில் தி.மு.க., வேட்பாளர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால், தி.மு.க, - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி என, மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், தி.மு.க., - பா.ம.க., இடையே தான் கடும் மோதல் உள்ளது. ஆளும் தி.மு.க., தரப்பில் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, நேரு, பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்கள், 30 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், விக்கிரவாண்டி, காணை, கோலியனுார் ஒன்றியங்களில் முகாமிட்டு, ஆளுக்கு ஐந்து கிராமங்களை பிரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

பா.ம.க., தரப்பில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிராமங்கள் தோறும் ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் முறைகேடுகளை விமர்சித்து, தினமும் அன்புமணி பிரசாரம் செய்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடைசி நாளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Trending News

Latest News

You May Like