ஆனா இது ரொம்ப புதுசு னே..!! விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை - அண்ணாமலை விளாசல்..!
முன்னாள் பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள கிட்னி திருட்டு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் இரண்டு விஷயங்களை கூறினார்கள். எனக்கு தெரியும், சீருடையில் இருக்கும் அரசு அதிகாரிகள் பத்திரிகையில் பேசக் கூடாது.
இன்றைக்கு நிலைமை அதனை எல்லாம் தாண்டி சென்றது. அதனால் தான் நான் உங்களிடம் பேசுகிறேன் என கூறினார். என் வீட்டில் இருந்து அலுவலகம் வரை நடந்து செல்லும் போது எந்த பத்திரிகையையும் நான் கூப்பிடவில்லை. இன்றைக்கு நான் பத்திரிகையை அழைத்து பேட்டி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.
இந்த அளவுக்கு அதிகாரிகள் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நீதி பெற்று கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.