1. Home
  2. தமிழ்நாடு

ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்... காளை மாட்டுடன் பைக்கில் டபுள்ஸ்..!

1

நம் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை பைக் அல்லது காரில் ஏற்றிச் செல்வது வழக்கம். ஆனால், இங்கு ஒரு இளைஞர்  காளையை பைக்கில் அழைத்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நைஜீரியாவில் ஒரு இளைஞர் தனது பைக்கில் காளையை ஏற்றிச் செல்கிறார். அந்த நபர் எப்படி காளையை பைக்கில் உட்கார வைத்து, பின்னால் அமர்ந்து பைக்கை ஓட்டுகிறார் என்பதை வீடியோவில் காணலாம். பெரிய கொம்புகளுடன் கூடிய காளையும் மிகுந்த சாதுவாக, ஜாலியாக பைக்கில் அமர்ந்து செல்கிறது.

இந்த வேடிக்கையான காட்சியை கார் ஓட்டுநர் ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார், இது சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது. சிலர் இந்த வீடியோவில் வருபவர் நைஜீரியாவைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ளவர்கள் அடிக்கடி இதுபோன்ற வினோதமான செயல்களைச் செய்வதாகவும் கூறி வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like