1. Home
  2. தமிழ்நாடு

ஊசி பாசி விற்று பிரபலமான மோனலிசாவிற்கு வைர செயின் பரிசளித்த தொழிலதிபர்..!

Q

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் ஊசி பாசி விற்று வந்த மோனலிசா போஸ்லேவின் அழகை ஒருவர் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டதும், மோனலிசாவின் கண் அழகை பலரும் ஆஹா ஓஹோ என வர்ணித்தனர்.

மோனலிசாவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. நிலைமை இப்படி இருக்க, இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் பிரபலமடைந்துள்ள மோனலிசாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் காதலர் தினத்தன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நகைக்கடை ஒன்றை மோனலிசா திறந்து வைப்பதாக காட்டுத்தீயாக தகவல் பரவ, கூட்டம் குவிந்தது.

பிரபல நடிகை ஒருவரின் பாலியல் புகாரால் அண்மையில் சிறைக்குச் சென்று வந்த தொழிலதிபர் பாபி செம்மனூருக்குச் சொந்தமான நகைக் கடையை திறந்துவைக்கத்தான் மோனலிசா கேரளா சென்றிருந்தார். அந்த காட்சிகள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

விழாவின் போது தொழிலதிபர் பாபியுடன் இணைந்து நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார் மோனலிசா. பின்னர், மோனலிசாவுக்கு அழகிய வைர நெக்லஸ் ஒன்றையும் தொழிலதிபர் பாபி செம்மனூர் பரிசளித்தார்.

Trending News

Latest News

You May Like