1. Home
  2. தமிழ்நாடு

பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்...தொழிற்சங்க முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப். 7-க்கு ஒத்திவைப்பு..!

1

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பிப்ரவரி 6-ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. 

எனவே, இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க ஒப்புக் கொண்டனர்.

போக்குவரத்துத் தொழிலாளா்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனா். இது தொடா்பான சமரச பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். 

இது தொடா்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி, கடந்த 19-ம் தேதி வரை வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.  இதையடுத்து, நேற்று நான்காம் கட்ட பேச்சுவாா்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளா் நலத் துறை அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, இப்பேச்சுவாா்த்தை நேற்று அம்பத்தூா் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பகல் 12 மணிக்குத் தொடங்கியது.  இந்தப் பேச்சுவாா்த்தையில், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநா்கள், போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தினா் கலந்து கொண்டனர்.

அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like