பேருந்துகள் ரெடி...1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
அண்ணாமலையார் கோவிலில் வரும் 4ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிசம்பர் 10ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து டிசம்பர் 13ம் தேதி மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.
தொடர்ந்து 14, 15ம் தேதி பவுர்ணமி அமைந்துள்ளதால் தீபத் திருவிழாவுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்காலிக பேருந்து நிலையம், பார்க்கிங் வசதிகள், சிசிடிவி பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், பெங்களூரு, சென்னை, வேலுார், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், சிதம்பரம், கும்பகோணம், பெரம்பூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம், தற்காலிக பேருந்துக நிலைய வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.