1. Home
  2. தமிழ்நாடு

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பேருந்து ஓட்டுனர்களுக்கு செம அறிவிப்பு..!

Q

கோடை வெயிலில் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நிலை அந்தோ பரிதாபம் தான். அதிலும் பேருந்து ஓட்டுனர்கள் அடுப்பில் உட்கார்ந்து ஓட்டுவதை போன்ற நிலைமை தான். பலரும் நொந்து நூடுல்ஸாகி வரும் நிலையில் வெயில் பாதிப்பிலிருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பேட்டரி மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கை மீது பேட்டரி மின்விசிறிகள் பொருத்தப்படுகின்றன. மகளிர் கட்டணமில்லாப் பேருந்து உட்பட சாதாரண கட்டணப் பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

முதற்கட்டமாக சென்னையில் 1000 மாநகரப் பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளில் பேட்டரி மின்விசிறி பொருத்தப்பட்டு வருகிறது. 

Trending News

Latest News

You May Like