தீபாவளி தினத்தில் இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க அனுமதி..!
புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும், அதேபோல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று அறிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள், நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதுவையை அடுத்து, தமிழகத்திலும் விரைவில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.