1. Home
  2. தமிழ்நாடு

ஜனவரி 1 முதல் இந்த நாட்டில் புர்காவுக்குத் தடை..!

1

பல்வேறு மக்களின் எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில், முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மீறினால், ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் புர்காவுக்குத் தடை என்பது, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், சில விதிவிலக்களுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியை மீறினால் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக, ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அதே வேளையில், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது, வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like