21 பேருக்கு தீக்காயம்: மா. சுப்பிரமணியன்..!
தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 21 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியபோது, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காயத்திற்கு என சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தஞ்சை, மதுரை மற்றும் திருச்சியில் தீக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சிலருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் போது எந்த உயிர்ச் சேதமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என அவர் கூறினார்.