1. Home
  2. தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; வேடிக்கை பார்த்த இளைஞர் மாடு முட்டி பலி !!

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; வேடிக்கை பார்த்த இளைஞர் மாடு முட்டி பலி !!


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு திருவிழா நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் காலை 10.10 மணிக்கு உற்சாகமாக தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 510 காளைகளும், 380 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சுழற்சி முறையில் முதலில் 150 வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். பின்னர் மதியம் 12.45 மணிக்கு பிறகு 150 பேர், மதியம் 2.45 மணிக்கு பிறகு 80 பேர் என 3 பிரிவாக மொத்தம் 380 வீரர்கள் களம் இறங்கினர்.
அதன்பிறகு வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமாக வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர்.

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; வேடிக்கை பார்த்த இளைஞர் மாடு முட்டி பலி !!

வாடிவாசல் வழியாக வந்த காளைகளின் உரிமையாளர்கள் பெயர், அந்த காளையை அடக்கினால் எவ்வளவு பரிசு என்ற விபரம் ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காளைகளின் திமில்களை பிடித்து அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் சில காளைகள் திமிரி எழுந்து சீறிப்பாய்ந்து சென்றது. பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டி தொடங்கிய 10 நிமிடங்களிலேயே மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் காயமடைந்தார். இதனால் அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 5 ஆம்புலன்ஸ்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; வேடிக்கை பார்த்த இளைஞர் மாடு முட்டி பலி !!
பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போது போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று வாடிவாசலை கடந்து திடீரென கலெக்சன் பாயிண்ட் பகுதியில் பாய்ந்தது. இதில் அங்கு பார்வையாளராக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார்(24) என்ற இளைஞரை காளை முட்டியது. இதில் அவருக்கு வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 21 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 13 பேரும், பார்வையாளர்கள் 10 பேரும், காவலர் ஒருவர் என 45 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like