1. Home
  2. தமிழ்நாடு

இன்று பட்ஜெட் தாக்கல்..! பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன ? பட்ஜெட் எதில் பார்க்க முடியும்?

1

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்குவார். இந்த பட்ஜெட் குறித்து அனைவரும் ஆர்வமாக உள்ளனர். அனைவரின் கவனமும் அதில் குவிந்துள்ளது. இந்த பட்ஜெட்டை எங்கு, எப்போது பட்ஜெட்டைப் பார்க்க முடியும் என்ற கேள்வி உள்ளது.
 

கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்தது. லோக்சபா தேர்தல் என்பதால் இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரி 1ஆம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024 ஜூலை 23ஆம் தேதியன்று, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பல்வேறு தளங்களில் பார்க்கலாம். நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை வழக்கம் போல் டிடி நியூஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது தவிர, பட்ஜெட் டிடி நேஷனலிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். டிடி நியூஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் உங்கள் மொபைல் போனிலும் மத்திய பட்ஜெட்டை நீங்கள் பார்க்கலாம்.
 

2025 மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியாகின, எது மலிவானது, எது விலை உயர்ந்தது, எந்த வரி குறைக்கப்பட்டது, எந்த வரி உயர்த்தப்பட்டது என்ற அனைத்து விவரங்களையும் அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறது. இந்த அதிகாரப்பூர்வ இணையதளமான www.indiabudget.gov.in என்ற வெப்சைட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பட்ஜெட் கிடைக்கும். நாம் பட்ஜெட் ஆவணங்களை அங்கு பார்க்க முடியும். இவை PDF வடிவத்தில் கிடைக்கும். நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம், படிக்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். 18வது லோக்சபா தேர்தலுக்கு பின் மோடி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறதும். முன்னதாக, லோக்சபா தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இது பெண்களுக்கான திட்டங்களின் தொகையை அதிகரிக்கவும், பிஎம் கிசான் திட்டத்தின் தொகையை அதிகரிக்கவும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோர் வருமான வரி கட்டமைப்பில் மாற்றத்தை விரும்புகின்றனர். புதிய வரிவிதிப்பு முறையில் கூடுதல் சலுகைகளை அவர்கள் விரும்புகிறார்கள். சாமானியர்களின் பாக்கெட்டில் அழுத்தத்தைக் குறைப்பதுதான் மத்திய அரசின் முன் உள்ள பெரிய சவால் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Trending News

Latest News

You May Like