1. Home
  2. தமிழ்நாடு

#BUDGET SPL: அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள்..!

1

வேளாண் துறைக்கான அறிவிப்புகள்: * வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

* அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* பிஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்

* கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

* எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பிஹாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் - NIFTEM) அமைக்கப்படும்.

மருத்துவப் படிப்பு - கூடுதல் இடங்கள்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.

அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி. சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.

மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம்

Trending News

Latest News

You May Like