1. Home
  2. தமிழ்நாடு

வரும் வெள்ளிக்கிழமை கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட்..!

1

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக விக்டோரியா ஹால்  கூட்டரங்கில், மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்  -வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கும் மற்றும் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்புக் கூட்டம் மதியம் 12.00 மணி அளவில் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, நேற்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், மேயர் ரங்கநாயகி தலைமையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் மண்டல குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த பட்ஜெட் அப்போதைய மேயர் கல்பனா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோவையின் மேயராக ரங்கநாயகி பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like