1. Home
  2. தமிழ்நாடு

பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள் முழு விவரம்..!

1

நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது 

நடுத்தர குடும்ப நலனுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
விவசாயம், பெண்கள், இளைஞர்களின் நலனிற்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது நாட்டின் வளர்ச்சி ஒன்றே பட்ஜெட்டின் நோக்கம் - நிர்மலா சீதாராமன் 
குறைந்த வேளாண் உற்பத்தி கொண்ட 100 மாவட்டங்களுக்கு புதிய திட்டம் 
1.7 கோடி விவசாயிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது 
பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்
பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு  - நிர்மலா சீதாராமன்
பீகாரில் தாமரை விதைக்களுக்காக புதிய வாரியம் அமைக்கப்படும் 
மீன் உற்பத்தியை பெருக்க மீனவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம்  
விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் 
கிஷான் கிரடிட் கார்டுகளுக்கான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு 

மொத்த ஏற்றுமதியில் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் ஏற்றுமதி 45%-ஆக உள்ளது.
ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்ய இலக்கு 
7.5 கோடி சிறுகுறு தொழில் முனைவோர் பயனடையும் வகையில் புதிய திட்டம் 
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம் - நிர்மலா சீதாராமன்

5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் 
பொம்மை உற்பத்தியில் உலகின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது.
தோல்பொருட்கள் உற்பத்தி துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்
50,000 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்படும்
சிறு முதல் பெரிய தொழில் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம்  உருவாக்கப்படும் 
ஐஐடியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 100% அளவிற்கு உயர்ந்துள்ளது
புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
கூடுதலாக 10,000 புதிய மருத்துவ இடங்கள் அடுத்த கல்வியாண்டில் உருவாக்கப்படும்
கல்வித்துறையில் AI திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்
தனியார் பொதுத்துறை பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்க இலக்கு


ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய இலக்குடன் புதிய அமைப்பு உருவாக்கப்படும்
அஞ்சல் துறை மிகப்பெரிய சரக்கு கையாளும் துறையாக மாற்றப்படும்
புதிய வருமான வரிச்சட்ட மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்
1961 முதல் உள்ள வருமான வரிச்சட்டம் மாற்ற நடவடிக்கை
மகளிர் சுய உதவி குழுவினருக்கு தனி கிரடிட் கார்டு வழங்கப்படும்
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு 74%-இல் இருந்து 100%ஆக சதவீதமாக அதிகரிப்பு
நாட்டின் வரி வருவாய் அதிகரித்து நிதி பற்றாக்குறை விகிதம் குறைந்து வருகிறது
நாட்டின் மூலதன செலவீனம் ரூ.10.18 லட்சம் கோடியாக இருக்கும். 
வரும் நிதியாண்டில் 14.82 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.8%-ஆக உள்ளது
6 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுமையான வரி விலக்கு
செல்போன், மின் வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது
லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரி ரத்தால் எலக்டிரிக் வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு

LED பேனல்களுக்கான சுங்க வரி 10%-இல் இருந்து 20%-ஆக உயர்வு.
வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படும்
வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படும் 
மூத்த குடிமக்களுக்கான வட்டியின் மீதான வருமான வரி பிடித்த வரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.1லட்சமாக உயர்வு.
வீட்டு வாடகைக்கான வரிக்கழிவு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்வு.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்வு.
ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி கிடையாது.
மாத வருமானம் ரூ.1 லட்சம் வரை பெறக்கூடியவர்கள் பலனடைவர் 

Trending News

Latest News

You May Like