1. Home
  2. தமிழ்நாடு

#BUDGET 2025 : 26 : பிகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்..!

1

நடப்பு 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட்டில் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விஷயங்களை அறிவித்தார். 

பிகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடான் திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தில் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிகார் மாநில உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Trending News

Latest News

You May Like