#BUDGET 2025-26: கிசான் கடன் அட்டை மூலம் 5 லட்சம் வரை கடன் வசதி..!

மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட் உரையை வாசிக்கும் நிலையில், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
ஆறு முக்கியம்சங்கள்
பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும். தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார். உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகியகால கடன் பெற நடவடிக்கை.கிசான் கடன் அட்டை மூலம் 5 லட்சம் வரை கடன் வசதி
கூட்டுறவுதுறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்
கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.தபால் நிலையங்கள் மூலம் ஊரக பகுதியில் வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.
பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.
உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.
சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம். பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசாமில் புதிய தொழிற்சாலை : யூரியா உற்பத்தி அதிகரிக்க அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு