பொது பட்ஜெட் தாக்கல் முழு விவரம் : ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு - வரி இல்லை..!
- நாடாளுமன்ற மக்களவையில் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல்
- புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.15000 முதல் ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
- 20 லட்சம் இளைஞர்களுக்கு வழங்க புதிய திட்டம் உருவாக்கப்படும்.
- பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- இலவச உணவு தானிய திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது
- நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளன
- நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 4%ஆக சரிவடையும்
- கல்வி, வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
- அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்
- பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும்
- காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகம் செய்யத் திட்டம்
- நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்
- நாட்டில் உள்ள வேளாண்துறையில் மானியம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
- அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க இலக்கு: நிர்மலா சீதாராமன்
- இந்திய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வளர்ச்சி பெற பிரதமர் உழைத்து வருகிறார்
- சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நீடித்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளது
- இளைஞர்கள் நலனிற்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது
- அடக்க விலையை காட்டிலும் 20% லாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது
- வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது
- விவசாயத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இனைந்து நடவடிக்கை
- பருவ நிலையை தாக்குபிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
- 4.1 கோடி இளைஞர்களின் முன்னேற்றதுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
- வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் 3 திட்டங்கள் அறிமுகம்
- முதல் திட்டத்தின்படி முதன்முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்
- 20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் 1,000 பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்
- வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குழந்தை பராமரிப்பகங்கள் ஏற்படுத்தப்படும்
- பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்
- உள்நாட்டு கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் ரூ.10 லட்சம் வரையில் கல்விக்கடன் வழங்கப்படும்
- 5 மாநில மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம்
- அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15000 கோடி
- பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள்
- ஆந்திரா மாநில மறுசீரமைப்பு சிறப்புத் திட்டம் அனுமதிக்கப்பட்டு, அமராவதி நகர வளர்ச்சிக்கு ரூ.15000 கோடி ஒதுக்கீடு
- சென்னை-ஹைதராபாத்-விசாகப்பட்டினம் தொழில்வழித்தட திட்டம்
- அனைவருக்கும் வீடு கட்டும் பிரதமரின் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு
- பீகாருக்கு ரூ.26,000 கோடி சிறப்பு நிதி
- ரூ.26,000 கோடியில் பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்
- ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி
- நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி
- முத்ரா கடன் - ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
- முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்
- பெண்கள் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி
- பெண் குழந்தைகள், பெண்கள் மேம்பாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு
- 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கம்
- நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்
- அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்.
- உள்நாட்டில் உள்ள தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய திட்டம்
- புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு
- திவாலான நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும்.
- மாநில அரசு, வங்கிகளுடன் இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்.
- உள்நாட்டு உற்பத்தியில் 3.4% உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு
- நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு மேலும் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
- பீகார் மாநில வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு.
- பீகாரில் 2400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி
- பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.5 கோடி நிதி
- 25,000 ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் மறுகட்டமைப்பு மேற்கொள்ள நிதி வழங்கப்படும்
- உலகளவில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக இந்தியா உருவாக்கப்படும்.
- நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு
- நாடு முழுவதும் விவசாயத்துறைகளில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
- நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 4.9%-ஆக இருக்கும்.அடுத்த நிதியாண்டில் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.5%-ஆக குறைக்க இலக்கு.
- அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் விதிகள் எளிமையாக்கப்படும்
- வரிச் சலுகைகள்: புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறைகிறது.
- தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
- பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
- வரிகள் சார்ந்த அறிவிப்புகள்: பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
- வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
- ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.
- டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
- அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
- தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டுவரப்படும்.
- நடப்பு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு
- தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது
- புதிய தனிநபர் வருமான வரி முறை - மக்கள் ஏற்பு'...மூன்றில் இரு பங்கு மக்கள் புதிய தனி நபர் வருமான வரி முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்
- குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்
- முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
- நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு
- வருமான வரி தொடர்பான அறிவிப்புகள்: தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு. குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள்.
- தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு; குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு ஆகியவை மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருமான வரி விவரம்: ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு - வரி இல்லை
- ரூ.3 -7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 5% வரி
- ரூ. 7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 10% வரி
- ரூ.10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 15% வரி
- ரூ.12 முதல் -15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 20%
- ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு - 30% வரி