பட்ஜெட்டில் வெளியான வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் - ரூ.3 லட்சம் வரை வருமான வரி பிடித்தம் கிடையாது..!
தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு. குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள்.
வருமான வரி விவரம்: ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு - வரி இல்லை
ரூ.3 -7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 5% வரி
ரூ. 7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 10% வரி
ரூ.10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 15% வரி
ரூ.12 முதல் -15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 20%
ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு - 30% வரி
* வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்.
* அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு ஒரே வரி முறை அறிமுகம் செய்யப்படும். இதுவரை இருந்த 2 வரி முறைகள், ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரி முறை நடைமுறைப்படுத்தப்படும்.
* தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இனி குற்றமாக கருதப்படாது.
* இணைய வர்த்தகத்திற்கான டி.டி.எஸ் குறைக்கப்படும்.
* நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீதம் குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
* அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுகிறது
* இந்தியாவில் சொகுசு கப்பல் இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்படும்.
* புதிய கணக்கு தாக்கல் முறையில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி பிடித்தம் கிடையாது.
* ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை 5 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்
* ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* 15 லட்சத்திற்கும் மேல் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.