1. Home
  2. தமிழ்நாடு

பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு : விவசாயிகளுக்கு லட்சத்தில் பரிசுத் தொகை!

1

தமிழகத்தில் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயிகள் நலனுக்காகவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிதுஅந்த வகையில் இந்த வேளாண் பட்ஜெட்டில் அதிக விளைச்சலை காட்டும் மூன்று விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் இடம் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

குறிப்பாக அதிக விளைச்சலை காட்டும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2.50 லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 1.50 லட்சம் ரூபாயும் மூன்றாவது பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் பயிர் உற்பத்தியை பெருக்கவும் தரமான 1.2 லட்சம் மெட்ரிக் டன் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த வருடத்திற்கான வேளாண் பட்ஜெட்டில் உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு சுற்றுலா, மானியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வேளாண் துறைக்கு 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு பட்டணத்தொகையாக 8186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் பயிர் கடன் மானியத்திற்காக 853 கோடியும் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க 525 கோடியும் பயிர் காப்பீட்டுக்காக 841 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இது மட்டுமில்லாமல் இயற்கை மேலாண்மை பணிகளுக்காக 2000 கோடியும் ஐந்தாயிரம் பேருக்கு சிரியா பால் பண்ணைகள் அமைக்க நான்கு சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வீட்டு தோட்ட காய்கறி சாகுபடி தென்னை பரப்பு விரிவாக்கம் நுண்ணீர் பாசன திட்டம் வேளாண் இயந்திரங்கள் வாடகை கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

.

Trending News

Latest News

You May Like