இன்று பட்ஜெட் கூட்டத்தொடா்: நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்..!
இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இது மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டமாக அமையும். இன்று நடக்கவிருக்கும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், வரிக்குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.