பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட் : பின்னணியில் மத்திய அரசு !

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்டெடுக்கவும், அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் மத்திய அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு அமைச்சகம், அலுவலகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை இனி வரும் காலத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கடந்த 12-ம் தேதி அனைத்து அமைச்சகம், மற்றும் செயலாளர் மற்றும் பொதுத்துறை நிறுவனம் ஆகியவற்றிக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது மத்திய அரசு. மத்திய நிதியமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-20-ம் ஆண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.15,500 கோடியும், அதே போல, எம்.எடி.என்.எல் நிறுவனம் ரூ.3,694 கோடியும் இழப்பைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்த இரு நிறுவனங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
newstm.in