1. Home
  2. தமிழ்நாடு

BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை - 3588 காலியிடங்கள்..!

1

எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) காலியாகவுள்ள 3588 Constable (Tradesman) – Carpenter, Plumber, Painter, Electrician, Pump Operator, Upholster, Cobbler, Berber, Sweeper, Tailor, Washerman, Khoji/Syce, Cook, Water Carrier, Waiter பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு
மத்திய அரசு வேலை 2025
துறைகள் Border Security Force (BSF)
எல்லை பாதுகாப்பு படை
காலியிடங்கள் 3588
பணிகள் Constable (Tradesman) – Carpenter,
Plumber, Painter, Electrician, Pump Operator,
Upholster, Cobbler, Berber, Sweeper, Tailor,
Washerman, Khoji/Syce, Cook, Water Carrier, Waiter
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 25.08.2025
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://rectt.bsf.gov.in/

காலிப்பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Constable (Tradesman) – Carpenter,
Plumber, Painter, Electrician, Pump Operator,
Upholster, Cobbler, Berber, Sweeper, Tailor,
Washerman, Khoji/Syce, Cook, Water Carrier, Waiter
3588
(ஆண்கள் – 3406
பெண்கள் – 182)
மொத்தம் 3588

 கல்வித் தகுதி

எல்லை பாதுகாப்பு படை (BSF) Constable (Tradesman) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சில குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI சான்றிதழும் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

வயது வரம்பு விவரங்கள்

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 25 ஆகவும் இருக்க வேண்டும்.

உயர் வயது வரம்பு தளர்வு: குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன. SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு உண்டு. OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பள விவரங்கள்

எல்லை பாதுகாப்பு படை (BSF) கான்ஸ்டபிள் (Tradesman) பதவியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியானோர், Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET), Written Test மற்றும் Documentation, Trade Test, Detailed Medical Examination ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறும் தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம்:

  • Women/ ST/ SC/ Ex-s விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-
  • கட்டண முறை: ஆன்லைன்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2025

எப்படி விண்ணப்பிப்பது:

எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.07.2025 முதல் 25.08.2025 தேதிக்குள் https://rectt.bsf.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like